தென் மாநில சன்மார்க்க சங்க 32 ஆம் ஆண்டு ஆன்மீக மாநாடு மேதகு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் துவக்கி வைத்தார். முன்னதாக தமிழில் வணக்கம் கூறிய அவர், தமிழ் மொழி இனிமையான மொழி என்று தமிழிலேயே கூறி அசத்தினார். திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் மூன்று நாள் மாநாடு. வள்ளலார் அருள்மணி அடிகளார் நடத்தும் இந்த மாநாட்டில் இன்று 16.3.2018 வெள்ளிக்கிழமை சிந்தனை பட்டி மன்றம் சிறப்புரை 17.3.2018 சனிக்கிழமை நகைச்சுவை பட்டி மன்றம் இன்னிசை கச்சேரி என நடைபெறவுள்ளது. முன்னதாக திருவண்ணமலைக்கு வருகைதந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி, மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
Popular Categories



