புது தில்லி: சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது என்றும், வேறு பாதையில் சேது சமுத்திர திட்டம் செயல் படுத்தப்படும் என்றும், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக, ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி, பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது. பாலத்தை சேதப்படுத்தாமல், வேறு பாதையில் திட்டத்தை செயல்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் சுப்பிரமணிய சுவாமி. இந்த வழக்குக்காக சுப்பிரமணிய சுவாமி அதிக தீவிரம் காட்டினார் என்பது குறிப்பிடத் தக்கது. அவரது ட்வீட்…
Today SC was told by Govt Ram Setu will not be touched. I finally after 20 yrs have concluded my case listed Transfer WP No. 26&27 of 2006
— Subramanian Swamy (@Swamy39) March 16, 2018