vignesh sivan - 2026

கடந்த சில ஆண்டுகளாகவே சூர்யாவின் படங்கள் சூப்பர் ஹிட் ஆகாமல் இருந்த நிலையில் கடந்த பொங்கல் தினத்தில் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. இந்த ஆண்டின் முதல் வெற்றிப்படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றுள்ளதால் சூர்யா உள்பட படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சூர்யா நேற்று சிகப்பு நிற டொயோட்டா கார் ஒன்றை பரிசாக அளித்தார். இந்த பரிசை பார்த்தவுடன் இன்ப அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் சிவன் சூர்யாவுக்கு தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்

என் போன்ற இளம் கலைஞர்களுக்கு இந்த பரிசு பெரும் ஊக்கமாக உள்ளது. இந்த பரிசுக்கு நான் தகுதியானவன் தானா என்பது தெரியவில்லை, ஆனால் என்னுடைய பொறுப்பு அதிகமாகியுள்ளது’ என்று கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending