
ராம்சரண் தேஜா, சமந்தா நடிப்பில் உருவான ‘ரங்கஸ்தலம்’ திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ஆதி பின்னிசெட்டி, ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்களை கேட்ட நடிகர் சூர்யா, தேவி ஸ்ரீ பிரசாத்தை வாழ்த்தியுள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் தனக்கு ரொம்பப் பிடித்திருப்பதாக தேவிஸ்ரீ பிரசாத்துக்கு சூர்யா வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான ‘சிங்கம் 2’ படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் தான் இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவை போலவே பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும் ‘ரங்கஸ்தலம்’ பாடல்களைக் கேட்டு பாராட்டியுள்ளார்.



