ஒருபுறம் மக்களவை இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததால், அந்த கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் இன்னொரு புறம் வெற்றியை ருசிக்க முடியாதது மட்டுமின்றி டெபாசிட்டையும் இழந்து வருகிறது காங்கிரஸ் கட்சி. சமீபத்தில் நடந்த மூன்று மக்களவை இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடு டெபாசிட் இழந்துள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, பாஜகவை வரும் பொதுத்தேர்தலில் வீழ்த்துமா? என்ற சந்தேகம் மற்ற கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திரிபுரா உள்ளிட்ட மூன்று மாநில சட்டசபை தேர்தல், மக்களவை இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டதால்தான் படுதோல்வி அடைந்தோம் என்பதை மிக தாமதமாக காங்கிரஸ் கட்சி தற்போது புரிந்துள்ளது. எனவே இனிவரும் தேர்தலில் அந்தந்த மாநில கட்சிகளுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த அதிரடி முடிவு காங்கிரஸ் கட்சிக்க்கு பலனளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்