சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு தனது யுகாதித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் மொழியால் வேறுபட்டாலும் வாழும் இடம் ஒன்று என்ற உணர்வோடு தமிழ் மக்களின் நெஞ்சங்களோடு பின்னிப் பிணைந்து சகோதர, சகோதரிகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாகவும், இந்தப் புத்தாண்டு, வாழ்வில் அனைத்து நலங்களையும், வளங்களையும், வெற்றிகளையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது போல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், யுகாதி பண்டிகையை மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடும் வேளையில் நாட்டின் வளர்ச்சிக்காகவும் நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நம் முயற்சிகள் அனைத்தும் நாட்டின் அமைதி, வலிமை, ஒளி மயமான வளர்ச்சிக்காகவும் உதவ வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.