பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவைக் கண்டன. இதனால் ஒரே நாளில் மார்க் ஸுகர்பெர்க்கிற்கு 600 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது ட்ரம்பிற்காக பணியாற்றிய கேம்பிரிட்ஜ் அனலிடிக்கா என்ற நிறுவனம், 5 கோடி ஃபேஸ்புக் பயனாளிகளின் விவரங்களை எடுத்து அதனடிப்படை யில் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்ததாம். இதனை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தில் பணிபுரிந்த பணியாளர் ஒருவர், ஒரு டிவி., நிகழ்ச்சியில் பேசும்போது கூறியுள்ளார். இதை அடுத்து பெரும் புயல் கிளம்பியது அமெரிக்காவில். இதனால் பலரது அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக குற்றச் சாட்டு முன்வைக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தச் செய்தி வெளியானவுடனேயே பேஸ்புக்கின் பங்குகள் 7% சரிவைக் கண்டன. பலரும் பேஸ்புக் தளத்தில் தங்களது குமுறலைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.