
அம்பேத்கர் பெயரில் ராம்ஜி என்ற வார்த்தையை சேர்க்க உ.பி. அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு ஆவணங்களில் அம்பேத்கர் பெயருடன் ராம்ஜி என்ற பெயரையும் சேர்த்து அழைக்க வேண்டும் என்று உபி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு ஆவணங்களில் அம்பேத்கர் பெயருடன் நடுப் பெயராக ‘ராம்ஜி’ என்ற பெயரையும் சேர்க்க வேண்டும் என மாநில அரசுக்கு ஆளுநர் ராம் நாயக் பரிந்துரை செய்திருந்தார். அதாவது டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் என்பதை டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என மாற்ற வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்.
அதனை ஏற்ற யோகி ஆதித்யநாத் அரசு, அம்பேத்கர் பெயரில் ராம்ஜி என்ற பெயரையும் சேர்க்க ஆணையிட்டுள்ளது. அரசுத்துறை அலுவலகங்கள், உயர் நீதிமன்றங்களில் உள்ள ஆவணங்களில் ராம்ஜி என்ற பெயரையும் சேர்க்க உத்தரவிடப் பட்டுள்ளது.
இந்திய அரசியல் சாசன பக்கங்களில் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார் என்றும், அதே போல் இனி அவரது பெயரை குறிப்பிட வேண்டும் என்றும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.



