
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என்று என்று கருதிக் கொண்டிருக்கிறார் சீமான். ஆனால், உண்மை என்ன என்று அவருக்குத் தெரியாது என்று, சீமான் அடி வயிற்றில் நெருப்பைப் பற்ற வைத்திருக்கிறார் வைகோ.
சீமானின் நாம் தமிழர் குழுவுக்கும் வைகோவுக்கும் ஏற்பட்ட பிரச்னை குறித்து புதன்கிழமை இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ இவ்வாறு கூறினார்.
இப்போதும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார், மறைந்திருக்கிறார் என்றெல்லாம் பேசிவருகிறார் வைகோ. உண்மை தனக்குத் தெரியும் என்று முழங்கி வரும் வைகோ, இந்த முறை, சீமானுக்கு எச்சரிக்கை விடுக்கும் முகமாகப் பேசியிருக்கிறார்.
விடுதலைப் புலிகளின் சின்னத்தையே தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என்று கருதிக் கொண்டு தன்னுடைய கொடியாக்கிக் கொண்டிருக்கிறார். உண்மை என்ன என்று அவருக்குத் தெரியாது. பிரபாகரனுடன் வேட்டைக்கு போனதாகவும், ஆமைக்கறி தின்றதாகவும்,கோயபல்ஸ் கூட சொல்ல முடியாத பொய்களைச் சொன்னார் சீமான். மொத்தம் 8 நிமிடம்தான் இவரைப் பார்க்க பிரபாகரன் அனுமதித்தார். புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. இப்போது எப்படி கிராபிக்ஸில் செய்கிறார்களோ அதுபோல் செய்து கொண்டார்கள்.
புலிகள் சீருடையை அணிந்து கொள்ளலாமா என்று கேட்டபோது, அதற்கு உங்களுக்கு அனுமதி கிடையாது என்று சொல்லிவிட்டார்… – இப்படி எல்லாம் சீமான் தகிடுதத்தம் செய்வதாக வைகோ பளிச்செனக் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் தன் உள்ளக் குமுறலை வைகோ கொட்டித் தீர்த்த போது…



