
நேற்று பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்களும் பல திரையுலக பிரபலங்களும் அவருக்கு கருப்புக்கொடு காட்டி தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். வானமும் பூமியும் நேற்று கருப்பால் சூழ்ந்தது. இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் கூறியதாவது:
கருப்பு என்பது சர்வதேச மொழி. இந்தியப் பிரதமருக்குப் புரிந்திருக்கும். காவிரி மேலாண்மை வாரியத்தைக் கட்டி எழுப்புங்கள். அது கர்நாடகத்துக்கு அநீதி அல்ல; தமிழ்நாட்டுக்கு நீதி” என அவர் பதிவிட்டுள்ளார்.
வைரமுத்துவின் இந்த பதிவுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்தும், பலர் ஆதரவு தெரிவித்தும் பதிவு செய்து வருகின்றனர்
https://twitter.com/vairamuthu/status/983986011255558146



