சீனுராமசாமியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி

சமூக அக்கறையுள்ள கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வரும் சீனுராமசாமி சமீபத்தில் ‘கண்ணே கலைமானே’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் முடிந்தபின்னர் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் உதயநிதி நடித்துள்ளார்.

இந்த நிலையில் சீனுராமசாமியின் அடுத்த படத்தில் பிரபல இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை சீனுராமசாமி தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். அவர் இதுக்குறித்து கூறியதாவது: விரைவில் சகோதரர் சமுத்திர கனி நடிக்க நான் இயக்க இணைவதென முடிவானது என்று கூறியுள்ளார்.

அதேபோல் சமுத்திரக்கனியும் தனது டுவிட்டரில் ‘விரைவில் அடுத்த பரபரப்பு’ என்று கூறியுள்ளார். சமுத்திரக்கனி, சீனுராமசாமி முதல்முதலில் இணையும் இந்த படமும் சமூக அக்கறாஇயுள்ள ஒரு படம் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

https://twitter.com/thondankani/status/985417085714075648