சென்னை: அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தமிழகத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், நேற்று தனது தரப்பு விளக்கத்தை அளிப்பதற்காக ஊடகத்தினரைச் சந்தித்தார் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்.
அப்போது அவரிடம் தகுதியையும், பதவிக்குக் கொடுக்கும் மரியாதையையும் மீறி கேள்விகளைக் கேட்டு ஊடகத்தினர் சிலர் துளைத்தெடுத்தனர். இதனால் சற்று கடுப்பு அடைந்த ஆளுநர், ஒரு கட்டத்தில் கோபப்பட்டார். பின்னர் பெண் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சிரித்துக் கொண்டே கன்னத்தை தட்டியுள்ளார். இதுவும் பெரிய அளவில் சர்ச்சையானது.
இதனிடையே, ஆளுநரிடம் ஊடகத்தினர் நடந்து கொண்ட விதம் குறித்து அதிருப்தியை வெளியிட்டுள்ளது பாஜக. ஆளுநரிடம் கேள்வி கேட்க இருக்கும் தைரியம் ‘அந்த’ தலைவரிடம் உண்டா என்று கேட்டிருக்கிறார் பாஜக.,வின் தேசிய செயலர் ஹெச்.ராஜா. தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவர் என்று பெயரைக் குறிப்பிடாமல் குறிப்பிட்டுள்ளார் ஹெச். ராஜா. இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவுகள்…
தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.

— H Raja (@HRajaBJP) April 18, 2018
10 ம் வகுப்பு கூட படிக்காத ஒருவர் தன் பேருக்கு முன்னால் டாக்டர் என்று போட்டுக் கொள்ள விரும்பிய அல்ப்ப ஆசைக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவன் உதயக்குமாரை கொலைசெய்த குடும்பம் இன்று கொந்தளிப்பது வேடிக்கை தான்

இப்படித்தான், முன்னர் ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்கும் தைரியம் உங்களுக்கு உண்டா என்று பத்திரிகையாளர்களைப் பார்த்துக் கேட்டார் தேமுதிக., தலைவர் விஜய காந்த். அப்போது அவர் சொன்ன அந்த ஒற்றைச் சொல், பரபரப்பாகப் பேசப்பட்டது. அது #தூ