
தென்காசியை அடுத்த மேலப்பாவூரில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 300 பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது,
பாரத பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எஸ்.சி.,எஸ்.டி., எம்.பி.சி. பிரிவினை சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது .தென்காசி எம்.எல்.ஏ., எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன், நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் ஆகியோர் கலந்துகொண்டு மத்தியஅரசின் திட்டங்கள் ,மற்றும் நன்மைகளை விளக்கி பேசிக்கொண்டிருந்தனர் ,அப்போது அரங்கில் ஊழியர்கள் சிலர் தண்ணீர் பாட்டில் ,பிஸ்கட் பாக்கெட் வழங்கப்பட்டது ,அவ்ளோதான் பலரும் தனக்கு கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற பதட்டத்தில் எனக்கு ,உனக்கு என அரங்கமே அதகளபட்டுப்போனது,விழா ஏற்பாடு செய்த கேஸ் ஏஜென்சியினருக்கும் பதட்டம் ,ஊழியர்கள் தங்கள் நிறுவனத்தினரிடம் கேட்காமல் செய்து விட்டார்கள் போல, ,மத்திய அரசின் நல்ல திட்டம் அது குறித்து விருந்தினர்கள் பேசும்போது இப்படி செய்யலாமா ? அப்படி போதுமக்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்தால் அரங்கில் நுழையும்போதே ஆளுக்கு ஒன்றாக கொடுத்து அனுப்பலாம் ,விழாவின் இடையில் இப்படி வழங்குது சிறப்பு விருந்தினர்களையும் அவமதிப்பு செய்வது போன்றது ஆகுமல்லவா ?
நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை டாக்டர் கீர்த்தி, ப்ரியா கேஸ் உரிமையாளர் லதாமகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை இன்டேன் நிறுவனம் மற்றும் சுரண்டை ப்ரியா கேஸ் ஏஜென்சியினர் செய்திருந்தனர்.



