கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா படகுசேவை மீண்டும் தொடங்கியது.
கன்னியாகுமரியின் மார்த்தாண்டம் அருகே கொட்டில்பாடு, வள்ளவிளை, குளச்சல், கொல்லங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இந்த கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் வீட்டுக்குள் புகுந்ததால், வள்ளவிளை கரையோரம் உள்ள மீனவர்கள் முகாமுக்கு மாற்றப்பட்டனர். 
கடல் சீற்றம் காரணமாக நேற்று கன்னியாகுமரி, குளச்சல், தேங்காய்பட்டினம், நீரோடி உள்பட மாவட்டம் முழுவதும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. வினேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளூவர் சிலைக்கு செல்லும் படகு சவாரியும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று கடல் சீற்றம் குறைந்ததை தொடர்ந்து விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா படகுசேவை மீண்டும் தொடங்கியது.



