பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவுடன், இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. போராட்டத்தை கைவிட்டால், கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரதீப் யாதவ் கூறியதால், இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஊதிய முரண்பாடுகளை நீக்கக்கோரி சென்னையில் 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 4வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2009ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு பணிக்கு சேர்ந்தவர்களை விட அதற்கு பின்னர் சேர்ந்தவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை குறைவான சம்பளமே கிடைப்பதாக இடைநிலை ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரே கல்வி தகுதியுடன் ஒரே பணியை செய்து வரும் நிலையில் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.