காவிரி விவகாரத்தில் மேலும் கால அவகாசம் கோரும் மத்திய அரசுக்கு ஜெயக்குமார் கண்டனம்

Jayakumar1 - 2026

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மேலும் 2 வாரம் அவகாசம் கோரியிருப்பது கண்டனத்திற்குரியது என்று அமைச்சர் ஜெயக்குமார்
கூறினார்.

மத்திய அரசின் மனுவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில், முதலமைச்சர் மீண்டும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

முன்னதாக, காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக அளித்த தீர்ப்பை செயல்படுத்த மேலும் 2 வாரம் கால அவகாசம் வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

காவிரி விவகாரத்தில் பிப்ரவரி 16ம் தேதி அளித்த இறுதித் தீர்ப்பின் போது ‘ஸ்கீம்’ ஒன்றை செயல்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசு வழக்கம் போல், காவிரி தொடர்பில் உள்ள நான்கு மாநிலங்களுடன் கூட்டங்களையும் ஆலோசனைகளையும் நடத்தியது. ஆனால், ஸ்கீம் ஒன்று அமைப்பதற்கான தொடர்பில் உச்ச நீதிமன்றம் விதித்த காலக் கெடு மார்ச் 29ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகிய மத்திய அரசு, ஸ்கீம் என்பதன் தெளிவான விளக்கத்தை அளிக்கும் படி கோரியது.

ALSO READ:  மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியமா என்பது குறித்து விளக்கம் கேட்டது. அதற்கு உச்ச நீதிமன்றம், ஸ்கீம் என்பது மேலாண்மை வாரியம் அல்ல, அதுவும் அடங்கியது என்று கூறி, மேற்பட்ட விளக்கங்களை பின்னர் கூறுவதாகத் தெரிவித்தது.

அப்போது “உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள ‘ஸ்கீம்’ என்பதன் பொருள், காவிரி மேலாண்மை வாரியமாக இருந்தால், அதனை உருவாக்க கூடுதலாக‌ 3 மாதங்கள் கால அவகாசம் வேண்டும் என்றும், கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தது.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்கிற வார்த்தைக்கு காவிரி மேலாண்மை வாரியம் என்பது பொருள் அல்ல. அது காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு தரக்கூடிய மற்ற அம்சங்களையும் உள்ளடக்கியது. எனவே காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் முழுவதும் கிடைக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்” என வாய்மொழியாக தெரிவித்தார்.

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மேலும், இந்த வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணைக்கு வந்த போது மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேலாண்மை திட்டத்தை தயாரித்து வரைவு திட்டத்தை மே 3-ஆம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

உச்ச நீதிமன்ற காலக்கெடு முடிவடைய சில நாட்களே உள்ள நிலையில் மத்திய அரசின் சார்பில் புதிய மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், காவிரி வழக்கின் தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் போதவில்லை, வரைவு திட்ட அறிக்கையை தயார் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் தேவ என கோரப்பட்டுள்ளது.

மே 3ஆம் தேதி காவிரி வழக்கு விசாரணைக்கு வரும் போது, இந்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories