ஆல் இந்தியா ஜூனியர் தேர்வு குழு தலைவராக ஆஷ்ஹிஸ் கபூர் (Aashish Kapoor) நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
மூன்று நபர் கொண்ட குழுவின் தலைவராக இருந்த இந்த பதவியில் இருந்த வெங்கடேச பிரசாத்திற்கு பதிலாக ஆஷ்ஹிஸ் கபூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் 11-வது ஐபிஎல் போட்டிகளில் பங்கேறும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக வெங்கடேச பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் கடந்த மார்ச் மாதம் பதவி விலகினார்.
ஆஷ்ஹிஸ் கபூர் மட்டுமின்றி தேர்வு குழுவில் ஞானேன்திர பாண்டே மற்றும் ராகேஷ் பரிக் ஆகிய இருவர் இடம் பெற்றுள்ளனர்.
ஆல் இந்தியா ஜூனியர் தேர்வு குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆஷ்ஹிஸ் கபூர் நான்கு டெஸ்ட் மற்றும் 17 ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி உள்ளார். இதில் 1996 ஐசிசி உலக கோப்பையும் அடங்கும். இதுமட்டுமின்றி 128 உயர்தர விளையாட்டு போட்டிகளிலும், 93 லிஸ்ட் எ போட்டிகளிலும் விளையாடியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.