இந்திய அணியின் கேப்டன் வீராத் கோலி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலோ அல்லது இங்கிலீஷ் கவுண்டி கிரிக்கெட் போட்டியிலோ விளையாடுவது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக குழு உறுப்பினர்களில் ஒருவரான வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ள இந்தியா அணியில் இந்த வீரர்களும் அழைக்கப்படவில்லை. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்ளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது..
இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் 16 தேதி முதல் பெங்களுரில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
இதை தொடர்ந்து ஜூலை மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று T20, மூன்று ஒரு நாள் மற்றும் ஐந்து டெஸ்ட் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.