சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய ‘காலா’ படத்தின் ‘செம வெயிட்டு’ என்ற பாடல் நேற்று இரவு வெளியாகி சூப்பர்ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த பாடலின் பார்வையாளர்களின் எண்ணிக்கை தற்போது 1.3 மில்லியனை கடந்துவிட்டது.
இந்த இந்த பாடல் வெளியாகி ஒருநாள் முடிய 4 மணி நேரம் இருக்கும் நிலையில் 1.5 மில்லியன் என்ற இலக்கை தொட்டுவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பாடலுக்கு 64ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களும் கிடைத்துள்ளது.
ஜூன் 7ஆம் தேதி வெளியாகும் ‘காலா’ படத்தின் மற்ற பாடல்கள் வரும் 9ஆம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் வெளியாகவுள்ளது.
ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், ஹூமாகுரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டேல், சுகன்யா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. முரளி ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.