டெல்லியில் இன்று பேட்மிண்ட்டன் தரவரிசை பட்டியலை பேட்மிண்ட்டன் உலக கூட்டமைப்பு இன்று
வெளியிட்டது.
இதில், இந்திய பேட்மிண்ட்டன் வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் வெள்ளி வென்ற ஸ்ரீகாந்த் ஐந்தாவது இடத்தை பிடித்திருந்தார். மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ். பிரணாய் இரண்டு இடங்கள் முன்னேறி எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தொடர்ந்து மூன்றாவது இடத்திலும், சாய்னா இரண்டு இடங்கள் முன்னேறி டாப் 10 பட்டியலுக்கு முன்னேறியுள்ளார்.