சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றுதான் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார். மேலும் வரும் 9ஆம் தேதி நடைபெறும் ‘காலா’ இசை வெளியீட்டு விழாவில் அவர் முக்கிய அறிவிப்புகளை அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சற்றுமுன் போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரணையில் இறங்கியபோது சமீபத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பிரதீப் என்பவர்தான், ரஜினி வீட்டுக்கும் மிரட்டல் விடுத்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தன்னுடைய செல்போன் நேற்றிரவு காணாமல் போய்விட்டதாக முதலமைச்சர், ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் பிரதீப் போலீஸ் விசாரணையில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அப்படியானால் உண்மையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.