- நெல்லை, தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த நபா் ராக்கெட் ராஜா. இவா் மீது கொலை வழக்கு, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் ராக்கெட் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியாா் விடுதியில் பதுங்கி உள்ளதாக சென்னை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரகசிய தகவலின் அடிப்படையில், தியாகராயநகா் காவல் துணை ஆணையா் அரவிந்தன் தலைமையலான குழுவினா் தனியாா் விடுதயை சுற்றி வளைத்து சோதனை நடத்தினா். இதனைத் தொடா்ந்து ராக்கெட் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தொிவித்துள்ளனா்.