கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏவான மு.க. ஸ்டாலின் அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்டார். பெரவல்லூர் பகுதியில் பேப்பர் மில்ஸ் சாலையில் வந்தபோது, ஒருவர் விபத்தில் சிக்கியிருந்தது தெரியவந்தது. காயமடைந்த அந்த நபரை உடனடியாக மீட்ட மு.க. ஸ்டாலின், அவரை ஆட்டோவில் ஏற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
காயமடைந்த நபர், அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பதும், இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, கார் மீது மோதி விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.