காவிரி பிரச்சனை பற்றி விவாதிக்க இன்று திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்ட உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய மத்திய அரசு, கண்டும் காணாமல் இருக்கின்றது. இதை கண்டித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள், அமைப்புகள், விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறோம். இன்று காவிரி பற்றி ஆலோசிக்க திமுக சார்பில் சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.