சமீபத்தில் நடந்த முடிந்த காமன்வெல்த் போட்டிகளின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஹீனா சிந்து, எதிர்வரும் ISSD உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தொடர்ந்து வெற்றி பெற உழைக்க வேண்டும் என்றார்.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் வரும் 22 முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.
28 வயதான ஹீனா சிந்து காமன்வெல்த் போட்டிகளில் 25 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். மேலும் கோல்டு கோஸ்ட்டில் நடைபெற்ற போட்டியில் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் வெள்ளி வென்றுள்ளார்.
அவரது தற்போதைய நோக்கம் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்னர் மாதத்தில் நடக்க உள்ள ஆசிய கோப்பை மற்றும் உலக சாம்பியஷிப் போட்டிகளில் வெற்றி பெறுவதேயாகும்.