எஸ்எஸ்ஐ., வில்சன் கொலை: இத்தாலி துப்பாக்கி எப்படி வந்தது? என்ஐஏ., விசாரணை!

Published:

nia officials - 2026

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் 2020 ஜனவரியில், சிறப்பு எஸ்.ஐ., வில்சன் பயங்கரவாதிகளால் சுடப் பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு அதே பகுதியைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தவுபீக் (28), அப்துல் ஷமீம் (28) உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ALSO READ: வில்சன் கொலை வழக்கு விசாரணை என்.ஐ.ஏ.,க்கு மாற்றம்!

பின்னர் வில்சன் கொலை வழக்கு தேசிய புலனாய்வு முகமை – என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், தவுபிக் உள்ளிட்டோருக்கு தலைவனாக செயல்பட்ட கடலுாரைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி காஜா மொய்தீனை தில்லியில் கைது செய்து திஹார் சிறையில் அடைத்தனர். பின்னர் சென்னை பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

ssi wilson - 2026

ALSO READ: வில்சன் கொலை வழக்கு! தென்காசியைச் சேர்ந்த 5 பேர் கைது

இவன்தான், வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய இத்தாலி நாட்டில் தயாரிக்கப்பட்ட 7.65 துப்பாக்கியை வாங்கியதும், இவனுக்கு மும்பையில் சிக்கிய இஜாஸ் பாட்ஷா என்பவன் உதவியதும் தெரியவந்தது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

ALSO READ: பகீர் தகவல்… எஸ்.எஸ்.ஐ வில்சன் அந்த பயங்கரவாதிகளை ஏன் தடுத்தார் தெரியுமா?!

இந்தத் துப்பாக்கியை, தவுபிக் மற்றும் அப்துல் ஷமீம் கைது செய்யப் பட்ட போது கேரளத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைப்பற்றினர். இந்தத் துப்பாக்கி பயங்கரவாதிகளுக்கு எப்படிக் கிடைத்தது; இதன் பின்னணியில் உள்ள முக்கியப் புள்ளிகள் யார் என்பது குறித்தெல்லாம், என்.ஐ.ஏ., அதிகாரிகளால் துப்பு துலக்க முடியவில்லை.

ALSO READ: சுரேஷ் முதல் வில்சன் கொலை வரை! ‘ஜிஹாதி’ கரங்களை முடக்காததால்… தொடரும் வினை!

இதை அடுத்து, காஜா மொய்தீனை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img