இங்கிலாந்து தொடருக்காக அவர் தயாரித்துக் கொள்ள சர்ரே கவுண்டி அணிக்கு ஆட அனுமதி வழங்கப்பட்டது, அந்த அணியும் ஜூன் மாதம் முழுதும் விராட் கோலி சர்ரே அணிக்கு ஆடுவார் என்று தன் இணையதளத்திலும் அறிவித்து விட்டது.
ஜூன் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அயர்லாந்தில் இரண்டு டி20 சர்வதேச போட்டிகளில் இந்தியா ஆடுகிறது.
இந்நிலையில் சர்ரே அணி ஜூன் 25-28-ல் யார்க் ஷயருடன் மோதுகிறது. இதில் கோலி ஆடியாக வேண்டும், அவர் ஒப்பந்தங்களின் படி ஜூன் மாதம் முழுதும் சர்ரே அணிக்கு அவர் ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.