இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் தொடர்ந்து முதல் இடத்தை பிடித்துள்ள சியோமி நிறுவனம், இன்று ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது. தற்சமயம் ஆன்லைனில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளவந்த வண்ணம் உள்ளது, அதன்படி ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் தங்கம் மற்றும் பிங்க் நிற வகைகளில் இந்த ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் கிடைக்கும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 720×1440 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 638 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வீடியோ கால் அழைப்பு மற்றும் இணையம் போன்ற பயன்பாட்டிற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனில் 16எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனில் 3080எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



