ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள துணை கவர்னர் பதவிக்கான இறுதிப் பட்டியலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 9 பேர்களுக்கான நேர்காணல் இன்று நடைபெற உள்ளது.
ரிசர்வ் வங்கி துணை கவர்னராக இருந்த எஸ்.எஸ். முந்த்ரா-வின் மூன்றாண்டு பதவிக் காலம் கடந்த ஆண்டு ஜூலையில் முடிவடைந்தது. இதையடுத்து, காலியாக உள்ள அப்பதவியை நிரப்பிடும் வகையில், தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. 40 பேர் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் பதவிக்கு விண்ணப்பித்தனர். அதில், 9 பேரை இறுதிப் பட்டியலுக்கு தேர்வு செய்த நிதித் துறை ஒழுங்குமுறை நியமனம் தேடல் குழு, அவர்களிடம் இன்று நேர்காணலை நடத்தவுள்ளது. ஐடிபிஐ வங்கி நிர்வாக இயக்குநர் எம்.கே. ஜெயின், எஸ்பிஐ நிர்வாக இயக்குநர்கள் பி.ஸ்ரீராம், பி.கே.குப்தா மற்றும் அதிகாரிகளாக பணியாற்றிய சிலருக்கும் நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிசர்வ் வங்கி துணை கவர்னர் பதவிக்கு மாதம் ரூ.2.25 லட்சம் சம்பளத்தோடு பிற படிகளும் சேர்த்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



