நடிகர் ரஜினிகாந்த் இன்று மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் செயலாளர் ராஜூ மகாலிங்கம், நிர்வாகி சுதாகர் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனைக்குப் பின் போயஸ் இல்லத்தில் மாவட்ட செயலாளர்கள், மாநில மன்ற நிர்வாகிகளுடன் ரஜினியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ரஜினியை சந்தித்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பேசுகையில், ஜூன் மாத இறுதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும்.
மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் அவர் பின் நாங்கள் நிற்போம்” என்றனர்.



