
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள (டிஓபி – Target Olympic Podium ) வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து அவர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு சிறப்பான முறையில் தயாராவதற்கான பல்வேறு உதவிகளை மத்திய விளையாட்டு அமைச்சகம் வழங்கி வருகிறது.
இந்நிலையில், டிஓபி வீராங்கனைகள் பட்டியலில் இருந்து பூனம் யாதவ் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இந்திய பளுதுாக்குதல் வீராங்கனை பூனம் யாதவ், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால், தற்காலிகமாக ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



