பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் ஐபிஎல் போட்டிகளில் 4000 ரன்களை கடக்க இன்னும் 42 ரன்களே தேவை என்ற நிலை உள்ளது. பெங்களூரூ அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 4000 ரன்களை கடப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று ஐ.பி.எல். பெங்களுரு அணியின் கேப்டன் கோலி, ஐபிஎல்லில் 5-வது முறையாக 500 ரன்கள் எடுக்க இன்னும் 34 ரன்களே தேவை என்ற நிலை உள்ளது. இன்று நடக்கும் போட்டியில் இந்த சாதனையை கடப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கோலி தலையிலான பெங்களுரு அணி, புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.



