சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “கர்நாடகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய நியாயம் மற்றும் உரிமை கிடைக்கப் போவதில்லை. நாம் எதிர்பார்ப்பதுபோல் காவிரி வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்கிறதா என பார்க்க வேண்டும். அப்படி இல்லையெனில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.
சமீபத்தில் பேசிய வைகோ, தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்கிற வன்மத்தோடு மோடி அரசு செயல்படுகிறது. மக்கள் பிரச்னை குறித்து எந்த வித அக்கறையும் இல்லாத பிரதமர் உலக நாடுகளைச் சுற்றிப்பார்ப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.



