டெஸ்ட் கிரிக்கெட்டில் டாஸ்-க்கு விரைவில் புதிய விதிமுறை

23 May17 test cricket - 2026டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் டாஸ் போடும் முறைக்கு முடிவுகட்ட சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் (ஐ,சி,சி) திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் எந்த அணி முதலில் பேட்டிங் அல்லது ஃபீல்டிங் செய்வது என்பதை முடிவு செய்யும் டாஸ் நடைமுறை இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடையே கடந்த 1877-ல் நடைபெற்ற முதல் போட்டியிலிருந்து தொடர்ந்து வருகிறது. கிரிக்கெட் போட்டிகளின் மரபாகத் தொடர்ந்து வரும் இந்த முறையில் மாற்றம் கொண்டு வர ஐ.சி.சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடர் வரும் 2019-ம் ஆண்டு நடைபெறுகிறது. அந்தத் தொடரின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்குகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து டாஸ் நடைமுறையைக் கைவிட ஐ.சி.சி திட்டமிட்டுள்ளதாகக் கிரிக்கெட் தொடர்பான செய்திகளைப் பதிவிடும் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மும்பையில் வரும் 28 மற்றும் 29-ம் தேதி நடைபெறும் ஐ.சி.சி கமிட்டியின் ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்பாக, அதன் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் இந்தச் செய்தியை வெளியிட்டிருப்பதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை உள்ளூர் அணிகள் வெற்றி பெறுவதற்காக பிட்ச் உள்ளிட்டவற்றைத் தங்களுக்கு ஏற்றபடி மாற்றியமைத்துக்கொள்வதாக ஒரு குற்றச்சாட்டு கிரிக்கெட்டில் நீண்டகாலமாகக் கூறப்பட்டு வருகிறது. உள்ளூர் அணிகளுக்கு இதனால் பலன் கிடைப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதற்கு முடிவுகட்டும் விதமாகவும் ரசிகர்களுக்கு டெஸ்ட் போட்டிகள் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் ஐ.சி.சி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் புதிய விதியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு அணிகளின் கேப்டன்களுக்கு, முதலில் பேட்டிங்/ஃபீல்டிங் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை அளிக்க ஐ.சி.சி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மும்பையில் நடைபெறும் ஐ.சி.சி-யின் கமிட்டிக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories