கர்நாடக தேர்தலின்போது மட்டும் பெட்ரோல், டீசல் விலையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து தற்போது மளமளவென உயர்த்தி மக்களை பெரும் துன்பத்துக்குத்தள்ளிய மத்திய அரசுக்கு எனது கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் மிக பெரிய தாக்குதல், விலைவாசி உயர்த்து அனைத்திற்கும் காரணம் பெட்ரோல், டீசல் உயர்வுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



