கேரளாவில் ‘நீபா’ (Nipah) எனும் புது வகை வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் பலியாகினர். மேலும் 25 பேர் மருத்துவமனைகளில் அனுமதி்க்கப்பட்டுள்ளனர். இது கேரள மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் ரத்த மாதிரிகள், புனே தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. முடிவுகள் வந்த பின் முழு விவரம் தெரியும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்த வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவி, விலங்குகளுக்கு பரவி, அதிலிருந்து மனிதர்களுக்கு பரவி வருவதாக தெரிய வந்துள்ளது



