பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றவே மீண்டும் களமிறங்கும் உள்ளேன் என்று உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனையும், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
செரீனா வில்லியம்ஸுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவருக்கு அலெக்சிஸ் ஒலிம்பியா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நான்கு மாதம் கழித்து மீண்டும் டென்னிஸ் விளையாட களம் இறங்கினார். ஆனால் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்நிலையில் வருகிற 27-ந்தேதி முதல் ஜூன் 10-ந்தேதி வரை நடைபெறும் பிரெஞ்ச் ஓபனில் விளையாட முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செரீனா ஜமீக்கா வில்லியம்ஸ் (Serena Jameka Williams) முன்னாள் முதல் நிலை அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை ஆவார். 39 கிராண்ட் சிலாம் பட்டங்கள் வென்றுள்ளார். இவர் வீனஸ் வில்லியம்ஸின் தங்கை ஆவார்.
செரீனா கிராண்ட் சிலாம்களில் 39 பட்டங்களைப் பெற்றது சாதனையாகும். 23 ஒற்றையர் பட்டங்கள், 14 இரட்டையர் பட்டங்கள், இரண்டு கலப்பினப் பட்டங்கள். நான்கு கிராண்ட் சிலாம் பட்டங்களையும் ஒரே நேரத்தில் வென்ற ஐந்தாவது பெண் டென்னிசு ஆட்டக்காரராக திகழ்கிறார். அண்மைக்கால விளையாட்டாளர்களில் இவரே இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருடைய தங்கை வீனசு வில்லியம்சுடன் இரட்டையர் ஆட்டத்தில் ஒரேநேரத்தில் நான்கு கிராண்ட் சிலாம் பட்டங்களைப் பெற்ற சாதனையையும் நிகழ்த்தி உள்ளார். இவர் ஒற்றையர் ஆட்டங்களில் 23 கிராண்ட் சிலாம் வெற்றிகளைப் பெற்றது இவரை ஆறாம் இடத்தில் வைத்துள்ளது.[3] செப்டம்பர் 10, 2012 இல் மகளிர் டென்னிசு சங்கம் கூட்டமைப்பின்படி இவரின் தர வரிசை நான்கு ஆகும், இரட்டையரில் இவரின் தரவரிசை 35 ஆகும்.
செரீனா வில்லியம்ஸ் இரட்டையர் ஆட்டங்களில் மூன்று ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ஒற்றையர் ஆட்டத்தில் ஒரு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். மற்றெந்த பெண் விளையாட்டாளரை விட மிகக் கூடுதலான பணிவாழ்வு பரிசுத்தொகை வென்றுள்ளார். தமது தமக்கையுடன் 1998ஆம் ஆண்டு முதல் 23 முறை நேரடியாக விளையாடி 13 முறை வென்றுள்ளார். இவற்றில் எட்டு கிராண்ட் சிலாம் இறுதிப் போட்டிகளில் ஆறில் வென்றுள்ளார். ஆறு ஆஸ்திரேலிய ஓப்பன் ஒற்றையர் பட்டங்களைப் பெற்ற ஒரே விளையாட்டாளராக, ஆண்/பெண் இருவரிலும், உள்ளார்.



