இரண்டு ஆண்டுகள் தடைக்குப்பின் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் விளையாட வந்த சென்னை அணிக்கு சென்னையில் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து புனேவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
திடீரென மாறியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றபடி மாறிக்கொள்ளுமா? என்ற சந்தேகம் எழும்பியது. ஆனால் மைதான பராமரிப்பாளர்கள் கடுமையாக உழைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏற்றவாறு ஆடுகளத்தை அமைத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 6-ல் ஐந்தில் வெற்றி வாகை சூடியது.
இரவு பகலாக உழைத்த மைதான பராமரிப்பாளர்களுக்கு பரிசு வழங்க டோனி முடிவு செய்தார். அதன்படி நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டம் முடிவடைந்தவுடன், மைதான பராமரிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 20 ஆயிரத்துக்கான தொகையும், தோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஃபிரேம் செய்தும் வழங்கப்பட்டது.



