சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி அடுத்த இரு ஆண்டுகளில் தாம் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள சீனியர்கள் தற்போது சிறப்பாக செயல்பட்டுவந்தாலும், அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் அவர்களின் உடல் தகுதி எவ்வாறு இருக்கும் என்பதை ஆராய வேண்டியுள்ளதாக தோனி கூறியுள்ளார்.
அப்போதும் சீனியர் வீரர்கள் இதேபோல விளையாடுவார்களா என்பது சந்தேகமே எனத் தெரிவித்துள்ள தோனி, அவர்கள் அணியில் இருப்பது கடினம் தான் என தம்மையும் சேர்த்து சூசகமாக கூறியுள்ளார்.



