
மதுரை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து உசிலம்பட்டியில் வழக்கறிஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று முதல் மூன்று நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பாக தமிழக மக்கள்மேடை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி போலீசாரின் துப்பாக்கி சூட்டை கண்டித்து தக்கலை வழக்கறிஞர்கள் நடத்திய மறியல் போராட்டத்தில் போலீஸ் வழக்கறிஞர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
நாமக்கல் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது



