தூத்துக்குடி கலவரம் எதிரொலியாக, சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மெரினாவில், கடற்கரை சாலை, சர்வீஸ் ரோடு, உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மெரினாவில் பொதுமக்கள் கூடுவதற்கும், கடற்கரைக்கு திரண்டு செல்வதற்கும் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். கடற்கரை சாலை முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் கூடினால், அதை தடுக்கும் வகையிலும், கலவரம் உருவாகும் நிலைமையில் அதனை தடுக்கும் வகையிலும் போலீஸார் தயார் நிலையில் உள்ளனர். 3 இணை ஆணையர்கள் தலைமையில் 2000 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கலவரத்தை கட்டுப்படுத்தும் சிறப்பு அதிரடிப் படையினரும் மெரினாவில் குவிக்கப்பட்டுள்ளனர்.



