தூத்துக்குடி கலவரம் துப்பாக்கிச்சூடு ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்த சூழலுக்குக் காரணமாக அமைந்த வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் விலைச் சரிவைக் கண்டுள்ளன.
ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வருகிறது வேதாந்தா நிறுவனம். இதன் பங்குகள் கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நேற்று ஸ்டெர்லைட்க்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் ஸ்டெர்லைட் மீதான மதிப்பு குறைந்தது. அதனால் வேதாந்தா நிறுவன பங்குகளும் விலை வீழ்ச்சியை சந்தித்தன. இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது ரூ.258.75 ஆக இருந்த வேதாந்தா நிறுவன பங்குகள், முற்பகல் ரூ. 255 ஆக சரிந்தது. இந்த விலை வீழ்ச்சி மேலும் தொடர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.




