தூத்துக்குடியில் இயல்பு நிலைமையை கொண்டுவருவதே முதல் பணி என்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசுகையில், துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு ? அது குறித்து விசாரிக்க தமிழக முதல்வர் விசாரணை கமிஷன் அமைத்துள்ளார் , அதுகுறித்து நான் எதுவும் பேசமுடியாது , அதிகாரிகளுடன் ஆலோசித்து தூத்துகுடியில் அமைதி திரும்ப அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.தேவைப்பட்டால் மக்களை சந்தித்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு அணைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்” என்றார்.
தூத்துக்குடியில் இயல்பு நிலைமையை கொண்டுவருவதே முதல் பணி: கலெக்டர்
Popular Categories



