பாஜக., நல்லது செய்திருந்தாலும் எதிர்மறைக் கருத்துகளே பரவுகின்றன: தமிழிசை

Published:

06 May 11 Tamil - 2026

பாஜக., நல்லதே செய்திருக்கிறது என்றாலும், எதிர்மறைக் கருத்துகளே வேகமாகப் பரவுகின்றன என்று கூறியுள்ளார் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போது அவர், பாஜக அரசு கடந்த 4 ஆண்டுகளில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.  ஆனால், பாஜக குறித்த நேர்மறை கருத்துகளை விட, எதிர்மறைக் கருத்துகளே வேகமாக பரவுகின்றன என்று வேதனை தெரிவித்தார்.

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவந்தால், மாநில அரசுகளின் வரி வருவாய் பாதிக்கப்படாது என்று  கூறிய தமிழிசை,  மத்திய அரசு, தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்று  கூறினார்.

பாஜக ஆட்சியில் 8 கோடி சிறு குறு தொழிலாளர்களை முதலாளியாக உருவாக்கி உள்ளோம் என்று குறிப்பிட்ட அவர்,  பாஜக 5 ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக,  தமிழகத்தில் 40 நாடாளுமன்றத் தொகுதியிலும் பாஜக.,வின் சாதனைகள் குறித்து பிரச்சாரம் செய்வோம் என்று குறிப்பிட்டார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img