ஊக்க மருந்து புகாரை தடுக்கும் வகையில், சிசிடிவி கேமரா பொருத்த உலக பளு தூக்கும் சாம்பியன் மீராபாய் சானு கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக சாம்பியனும், காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருமான மீராபாய் சானு கடந்த 4 ஆண்டுகளில் 45 முறை ஊக்கமருந்து சோதனைக்கு உள்படுத்தப்பட்டார். ஆனால் அனைத்து சோதனைகளிலும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக இந்திய பளுதூக்கும் சம்மேளனம் மற்றும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு அவர் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இதில், ஊக்க மருந்து புகாரில் தன்னை சிக்க வைக்க சிலர் முயற்சித்ததாக குறிப்பிட்ட அவர், பயிற்சி செய்யும் அறை, உணவருந்தும் இடம், தங்கும் அறைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக இந்திய பளு தூக்கும் சம்மேளனமும் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



