சிங்கப்பூர் – கோலாலம்பூர் இடையிலான புல்லட் ரெயில் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மலேசிய பிரதமர் மஹாதிர் முஹம்மது அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மலேசிய பாராளுமன்றத் தேர்தலில் மஹாதிர் முஹம்மது வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றார். இவர், முன்னாள் பிரதமர் நஜீப் ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை ரத்து செய்யப் போவதாக கூறியிருந்தார். இந்நிலையில், கோலாலம்பூர் நகருடன் சிங்கப்பூரை இணைக்கும் புல்லட் ரெயில் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மஹாதிர் முஹம்மது தெரிவித்துள்ளார். இந்த ரெயில் சேவையின் மூலம் 350 கிலோ மீட்டர் தூரத்தை 90 நிமிடங்களில் சென்றடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



