ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து ஒரு நாள் மட்டுமல்ல, ஒரு ஆண்டு முழுவதும்கூட விவாதிக்க தயார் என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
சென்னை மெரினாவில் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜியுடன், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். பேரவையில் தங்கள் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு, ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதாக அவர் கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கு யார் காரணம் என்பது குறித்து, சட்டமன்றத்தில் நாள் முழுவதும் விவாதிக்க முதலமைச்சர் தயாரா என மு.க.ஸ்டாலின் அறைகூவல் விடுத்தது பற்றி ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஆண்டு முழுவதும்கூட விவாதிக்க தயார் என்று அவர் பதிலளித்தார்.



