சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா இன்று தொடங்குகிறது.
இன்று விநாயகர் வழிபாடு, காப்புக் கட்டுதல் நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்குகிறது. நாளை சூரிய பிரபை வாகன வீதிஉலா, 6-ஆம் தேதி சந்திரபிரபை வாகன வீதிஉலா, நாளை மறுநாள் பூதகி வாகன வீதிஉலா, 8-ஆம் தேதி தெருவடைச்சான் (அன்ன வாகனம்) வீதிஉலா நடைபெறுகிறது. தொடர்ந்து, 9-ஆம் தேதி காமதேனு வாகன வீதிஉலா, 10-ஆம் தேதி கைலாய வாகன வீதிஉலா, 11-ஆம் தேதி ரிஷப வாகன வீதிஉலா, 12-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்த் திருவிழா, 13-ஆம் தேதி சிவப்பிரியையில் தீர்த்தவாரி, 14-ஆம் தேதி மஞ்சள்நீர் விளையாட்டு, முத்துப்பல்லக்கு வீதிஉலா, 15-ம் தேதி தெப்ப உற்சவம் ஆகியவை நடைபெற உள்ளன. 16-ஆம் தேதி திருஊஞ்சல் நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.



