தூத்துக்குடிக்கு வருகிறார் மோடி! மாணவி கேட்டுக் கொண்டதால் வருவதாக உறுதி!

Published:

modi reuters 6 - 2026

மாணவி ஒருவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தாம் தூத்துக்குடிக்கு வர உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் திட்டத்தால் பயன் பெற்ற மக்களிடம் நேரடியாக காணொளிக் காட்சி மூலம் உரையாடி வருகிறார் பிரதமர் மோடி. அதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அடல் டிங்கரிங் லேப் திட்டத்தால் பயன்பெற்ற தூத்துக்குடியில் உள்ள சுப்பையா வித்யாலா பள்ளி மாணவிகளுடன் அவர் காணொளிக் காட்சி மூலம் தில்லியில் இருந்தபடியே உரையாடினார்.

அப்போது சூரிய ஒளி மின்சக்தி மூலம் நவீன நீர் பாசன எந்திரத்தை உருவாக்கி உள்ளது குறித்து மாணவி ஜீவிதா பெத்துலட்சுமி  பிரதமரிடம் விளக்கிக் கூறினர். அப்போது, பிரதமராகிய நீங்கள் தூத்துக்குடிக்கு வரவேண்டும் என்று அந்த மாணவி வேண்டுகோள் விடுத்தார்.

மாணவியின் வேண்டுகோளை ஏற்ற பிரதமர் மோடி தாம் நிச்சயம் தூத்துக்குடிக்கு வருவதாக உறுதி அளித்தார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img