மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி, சென்னையில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கத்தின் கவுரவ செயலாளர் ஏ.வி.வித்யாசாகர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநில அளவிலான முதலாவது எஸ்டிஏடி-ஏகேஜி டேபிள் டென்னிஸ் போட்டி ஜூன் 8, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன் நடைபெறும் இப்போட்டி சென்னை, நேரு விளையாட்டரங்கில் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் நடைபெறும். பங்கேற்க விரும்பும் வீரர், வீராங்கனைகள் ஜூன் 4ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்கள் அறிய 94440 60262 அல்லது 94442 02006 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.